இன்றைய நாகரீக உலகில் அபரிதமான அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் காரணமாக உலகில் எங்கு,என்ன நடந்தாலும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். இதன் அடிப்படையில் 25 ஆண்டுகள் செய்தி துறையில் அனுபவமுள்ளவர்களை கொண்டு எங்களது ( டிஎன் மிர்ரர் டாட் காம் ) tnmirror.com என்னும் நியூஸ் சேனலை தொடங்கியுள்ளோம்.
எங்களது செய்தி சேனலில் உள்ளூர், மாநில, தேசிய மற்றும் உலக செய்திகளை எளிய தமிழில் உண்மையுடனும், உடனுக்குடனும் தருகிறோம். மேலும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் செய்திகளுக்கு முக்கியத்துவம் தர உள்ளோம்.
எங்கள் செய்தி சேனல் பக்கம் முகப்புடன் தொடங்குகிறது. தொடர்ந்து உலக செய்திகள், இந்தியா, தமிழ்நாடு, மாவட்ட வாரியாக செய்திகள், அரசியல், சினிமா, விளையாட்டு, கல்வி, மருத்துவம், வணிகம், ஆன்மீகம், மகளிர்பக்கம், போலீஸ், விவசாயம், சங்கங்கள் மற்றும் அமைப்பு செய்திகள்(ரோட்டரி, அரிமா உள்பட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்), கட்சி செய்திகள், சாதனையாளர்கள், சிறப்பு பேட்டி, மீம்ஸ், தங்களது படைப்புகள் மற்றும் பொது செய்திகள் என பல பிரிவுகளாக வெளியிட்டு வருகிறோம்.
அதேபோல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், நிபுணர்கள், முதியவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் சுவாரசியமான செய்திகளையும் தாங்கி வருகிறது. .
தாங்கள், தங்கள் பகுதியில் பார்த்த, பாதித்த எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனை வாட்ஸ்அப் (whatsapp) மூலமாக எங்களுக்கு போட்டோவுடன் அனுப்பினால் நாங்கள் அதை பிரசுரித்து தருவதுடன், அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை ரீதியான அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து அந்த பிரச்சனையை தீர்க்க வழி செய்கிறோம்.
எங்களது tnmirror.com ( டி.என் மிர்ரர் டாட்.காம் ) நியூஸ் சேனல் 2025 பிப்ரவரி முதல் அதன் செய்தி சேவையை தொடங்கியுள்ளது. அதேபோல் வாசகர்களாகிய நீங்களும் எங்களுடைய செய்தி சேனல் குறித்து விமர்சனங்கள், கருத்துக்கள் தெரிவிக்கலாம்