முழு உலக சமூகத்துக்கும் வாழ்வியல் முறையை வித்திட்டவர் நபிகள் நாயகம் திண்டுக்கல் அரபிக் கல்லூரி பேராசிரியர் முஹம்மத் அபுதாஹிர் பேச்சு
அவிநாசி சித்தீகி பதிப்பகம் மற்றும் ஜாமிஅதுல் இமாம் முஜத்தித் அல்ஃபிஸ்ஸானி ஷரீஅத் கல்லூரி சார்பில் நானிலம் போற்றும் நபிகள் நாயகம் (ஸல்) என்ற புத்தகத்தில் இருந்து கடந்த மாதம் 31ஆம் தேதி ஆன்லைன் மூலம் மாநிலம் தழுவிய கேள்வி பதில் போட்டி நடந்தது.இதனை தொடர்ந்து சித்தீகி பதிப்பகம் சார்பில் மீலாது விழா மற்றும் நபிகள் நாயகம் பற்றிய மாநிலம் தழுவிய கேள்வி பதில் போட்டியின் பரிசளிப்பு விழா அவிநாசி குலாலர் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு அவிநாசி அல் உஸ்வா இஸ்லாமிய அறக்கட்டளை நிர்வாகி சவுக்கத்தலி தலைமை தாங்கினார். ஹஜரத் முஹம்மது இத்ரீஸ் யூஸுஃபி கிராஅத் ஓதி தொடக்கி வைத்தார். அவிநாசி நீதித்துறை அலுவலர் அப்துல்லா வரவேற்றார். மாணவர் முஹம்மது ஹசன் இஸ்லாமிய கீதம்பாடினார்.அவிநாசி நூருல் யக்கின் பள்ளிவாசல் தலைமை ஹஜ்ரத் மன்சூர்அலி வாழ்த்துரை வழங்கினார்.அவிநாசி தொழில்அதிபர் ஷேக்முஹம்மது தொடக்க உரையாற்றினார். திண்டுக்கல் தாருல் உலூம் யூஸுஃபிய்யா அரபிக் கல்லூரி பேராசிரியர் முஹம்மத் அபுதாஹிர் ஃபாஜில் சிறப்புரை ஆற்றினார்.அப்போது அவர் பேசியதாவது: இஸ்லாம் மதத்தில் தான் சமத்துவம் வேறுன்றியது. நல்லவன், கெட்டவன், கருப்பர் வெள்ளையர் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. யாருக்கு இறையச்சம் உள்ளதோ அவர்கள் தாம் உயர்ந்த வாழ்க்கை வாழ்வார்கள். யாரையும் பிற்படுத்தப்பட்ட ஜாதி என ஒதுக்காத மதம் இஸ்லாமிய மதம்தான். கொண்ட கொள்கையில் உறுதி, துடிப்பு கொண்டவர் தான் நபிகள்நாயகம்.சமத்துவம்,சகோதரத்துவம் கொண்டதால்தான் 1480 வருடங்களாக உலக மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் நபிகள் நாயகம். ஒரு மனிதன் கண்ணால் கூட மோசடி செய்யக் கூடாது. உலக மக்கள் அனைவரும் முழு உலக சமூகத்துகும் வாழ்வியல் முறையை வித்திட்டவர் நபிகள் நாயகம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து கேள்வி பதில் போட்டியில் தமிழகத்தின் 34 மாவட்டங்களில் இருந்து 950 நபர்கள் கலந்து கொண்டார்கள். இதில் 50-க்கும் மேற்பட்டோர் மாற்று மத சகோதரர்கள். போட்டியின் முடிவில் முதல் பரிசு பெற்ற நாகப்பட்டினம் சுமையா ஜபருல்லா வுக்கு ரூபாய் 10 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு திருவாரூர் மாவட்டம் ரஹ்மத் நிஷாவுக்கு ரூ. 7,500ம், மூன்றாவது பரிசு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்று மத சகோதரி ரஞ்சனிக்கு ரூ. 5 ஆயிரம், நான்காவது பரிசாக திருப்பூர் மாவட்டம் மதீனா அப்ரினுக்கு ரூ 3 ஆயிரம், ஐந்தாவது பரிசாக கடலூர் மாவட்டம் மரியம் சாதிக் அலிக்கு ரூபாய் 1,500 ரொக்கப் பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு பரிசாக 45 பேருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.அதேபோல் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப் பட்டது. முடிவில் அவிநாசி ஜாமிஅதுல் இமாம் முஜத்தித் அல்ஃபிஸ்ஸானி பேராசிரியர் இர்ஃபான் நன்றி கூறினார். திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா தலைவர் உமர் பாரூக் சிறப்பு துவா ஓதி விழாவை முடித்து வைத்தார்.நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, நகரசெயலாளர் திராவிடம் வசந்தகுமார், நகரமன்ற தலைவர் தனலட்சுமி பொன்னுச்சாமி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக திருப்பூர் மாவட்ட செயலாளர் அபுசாலி, அவிநாசி 15 வது வார்டு கவுன்சிலர் பரகத்துல்லா உட்பட அவிநாசி சுற்றுப்பகுதி இஸ்லாமிய பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
Read More
13-09-2025 10:18 PM
Share